இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர்
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
Bhakthavatchaleswarar temple is a hindu temple dedicated to God Shiva located in the place of thirukalukundram. Thirukazhukundram Arulmigu Bhakthavatchaleswarar Big Temple is one of the famous shiva temple in Tamil Nadu. Tirukalukundram Bhakthavatchaleswarar temple is Situated in 75 km from Chennai, 13 km from Chengalpattu and 17 km from Mamallapuram. This Thirukalukundram Temple is also called as pakshi tirtha, holy place of eagles, and is famous for the two eagles that arrive every day at 12 Noon and are fed by the temple priest . After being fed, the eagles fly to the other side of the hill to clean their beaks where there are large indentations in the hill side from this being done for so many years.,
Bhakthavatchaleswarar Temple Opening Time : Morning 6 A.M To 12.30 P.m, Evening 4.30 To Night 8.30 P.M.
திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் மிகவும் புகழ்பெற்ற சிவாலயங்களும் ஒன்றாகும், திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் செங்கல்பட்டிலிருந்து 14km தொலைவிலும், சென்னையிலிருந்து 70 km தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 17km தொலைவிலும் அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவாலயமாகும். அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் ஏழு நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு நான்கு கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் உள்ள மண்டபத்தில் கோவில் அலுவலகம் உள்ளது. அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நான்கு கால் மண்டபத்தையடுத்து இரண்டாவது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது. இரண்டாவது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்டஆத்மநாதர் சந்நிதி உள்ளது. பாணப்பகுதி இல்லை. இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர்,தலவிநாயகரான வண்டுவன விநாயகர்,ஜம்புகேசுவரர், அருணாசலேசுவரர் முதலிய சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப் பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது. அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சுற்றி வலம்வர வசதி உள்ளது. உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள். அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. ஓராண்டில் மூன்று நாட்கள் மட்டுமே (ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு) திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு எதிரில் பிரத்யட்ச வேதகிரீசுவரர் சந்நிதி. அதையடுத்து நடராச சபை. பிராகாரம் வலம் வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலதுபுறம் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது,துவார பாலகர்களை வணங்கி உள் சென்று,உள் சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், 63 மூவர் மூலத் திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார். மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேசுவரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர்,தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா,துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார். உட்பிராகாரத்திலுள்ள சுமார் ஏழு அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் திருவுருவம் பார்த்து மகிழ வேண்டியதாகும்.
பக்தவச்சலேஸ்வரர்-திருக்கோவில் தினந்தோறும் காலை 6மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.